தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தானும் நயன்தாராவும் பெற்றோர் ஆகி இருப்பதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இவர் தந்தையானது குறித்து பேட்டி ஒன்றில், ”கனவு மாதிரி இருக்கு. இது கடவுளின் ஆசீர்வாதம். நான் அப்பாவாகி விட்டேன் என்பதை இன்னும் என்னால் முழுவதுமாக சிங் ஆக முடியவில்லை.
மேலும், குழந்தைகளுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் இருக்க முடியுமா அவ்வளவு நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறேன் என கூறியுள்ளார்.