தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் கோமாளி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருவதோடு, வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் லவ் டுடே படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்துள்ளார்.
அதன்பின் பிரதீப் ரங்கநாதனுக்கு சால்வை அணிந்து லவ் டுடே படத்திற்காக ரஜினிகாந்த் அவரை பாராட்டியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் என்னால் இன்னும் என்ன கேட்க முடியும்?. சூரியனுக்கு அருகில் நிற்பது போன்று இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டியுள்ளார். நீங்கள் சொன்ன வார்த்தைகள் எதையும் என்னால் மறக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டாரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
What more can I ask for ? It was like to be near a sun . So warm . The tight hug , those eyes , the laugh , the style and the love . What a personality . SUPERSTAR @rajinikanth saw #LoveToday and wished me ❤️ Will never forget the words you said sir ❤️@archanakalpathi pic.twitter.com/Zm0ceJ1iZm
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 12, 2022