தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படகுழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் கையில் கிளாஸ் உடன் தளபதி விஜய் கெத்தாக அமர்ந்திருக்கிறார். மேலும் இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறார்கள்.\
Gear up for #VarisuPongal 🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman
#Varisu #VarisuHoardings pic.twitter.com/OP66AjlKYQ— Sri Venkateswara Creations (@SVC_official) November 29, 2022