லொஸ்லியா செய்த தவறால் கோவம் அடைந்த அவரது தந்தை அவரை அதட்ட இனி தவறு செய்யமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்ப காலகட்டத்தில் எந்த விறுவிறுப்புடன் தொடங்கியதோ அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் ஒன்பதாவது நாளான இன்று வரை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே லாஸ்லியா கவின் இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் சமூக வலைதளத்தில் மோசமான பிம்பத்தை லொஸ்லியா மீது ஏற்படுத்தியிருந்தது. பலரும் இதனை விமர்சித்து வந்தனர்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இன்று லொஸ்லியாவின் குடும்பமே வந்தது. முதலில் அவரது தாய் தங்கைகள் வர நீ முன்புபோல் இல்லை நீ நீயாக இல்லை முற்றிலும் மாறி விட்டாய் விளையாட்டை விளையாட்டாகப் பார் என்று கண்ணீர்விட்டு அவருக்கு அட்வைஸ் செய்தனர். இவர்களை தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த லாஸ்லியாவின் தந்தை நுழைந்தவுடன் நீ எதற்காக இங்கே வந்தாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று அதட்டினார்.
இதை பார்த்தவுடன் கவினின் கண்கள் பிதுங்கி கண்ணீர் மல்க பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்கள் குடும்பத்தின் முகத்திலையே முழிக்க முடியாமல் சென்றுவிட்டார். லாஸ்லியா கதறி அழ தங்தை சமாதானம் செய்து நீ நீயாக உனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் எங்களுக்கு போதுமானது.
இந்த பணம் எதுவும் எங்களுக்கு வேண்டாம் மானம் ஒன்று தான் முக்கியம் மற்றவர்களுக்கு முன் எங்களை தலைகுனிய விட்டு விடாதே என்று கூறினார்கள். பின் தவறை உணர்ந்த லாஸ்லியா இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்று உறுதி அளித்தார். அதன்பின் லாஸ்லியாவின் குடும்பம் கவின் உட்பட சக போட்டியாளர்கள் இடையே சகஜமாக பேசி பழகி வந்தனர்.