இந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதன்பின் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத செயலுக்கு துணை போவதாக மத்திய அரசு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்ததால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புக்கு இந்தியாவில் 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து பேசி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தரப்பில் எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் அர்ஜுன் சம்பத் தலைமையில் 10 பேர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் போது அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இந்தியாவில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொடர்ந்து பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தமிழகத்துக்கு யாசிக் மாலிக்கை அழைத்து வந்து தனி தமிழ்நாடு என்ற போராட்டத்தை ஏற்கனவே சீமான் நடத்தினார்.
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒருதலைப்பட்சமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என்றார். அர்ஜுன் சம்பத் ஏற்கனவே திருமா மற்றும் சீமானுக்கு எதிராக பேசக்கூடியவர் என்றாலும், தற்போது டெல்லியில் போராட்டத்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதாவது நேரடியாக திருமா மற்றும் சீமான் மீது ஆக்சன் எடுத்தால் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது என்று பேச்சு வந்துவிடும். இதனால்தான் அர்ஜுன் சம்பத்தை வைத்து திருமா மற்றும் சீமான் மீது நடவடிக்கை எடுப்பதற்குதிட்டமிட்டுள்ளதாக பாஜக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. மேலும் கூடிய விரைவில் திருமா மற்றும் சீமான் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.