மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் அவரது அறியாமையை காட்டுகிறது என்று பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மத அரசியலை செய்யவில்லை.
இவ்வாறான கருத்துக்களை கூறி மலிவான அரசியலை ரஜினிகாந்த் அவர்கள் செய்யாமலிருப்பது நல்லது. மீண்டும் இதுபோன்ற கருத்துக்களை அவர் தெரிவித்தால் அது அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று ரஜினிக்கு எஸ் ஆர் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.