Categories
லைப் ஸ்டைல்

இது சுவைக்காக மட்டும் அல்ல…. இதில் பல நன்மைகள் குவிந்து கிடக்கிறது…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

தேங்காய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.

உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய். தேங்காய் மற்றும் தேங்காய் பால் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு தேங்காயை கடித்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு பல் உறுதியடைவதோடு, நிறைய சத்துக்களும் கிடைக்கின்றன.

நன்மைகள்:

1.தேங்காய் பால் மற்றும் தேங்காயில் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

2.தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை, வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

3.தேங்காயில் உள்ள மோனோ லாரின் வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

4.முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாக பயன்படுகிறது. அதில் உள்ள விட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை  ஊக்கப்படுத்துகிறது. எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும்.

5.தேங்காய் பால் அருந்துவதால் உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

6.இதில் இரும்புச்சத்து கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. வயிற்றுப்புண்களை ஆற்றும் மருந்து பிரச்சினைகளை தீர்க்கும் மருந்தாகவும் உள்ளது.

7.மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடல் உறுப்புகள் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

Categories

Tech |