பிரதமர் டியூப்லைட் என பேசியது அழகல்ல என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் நேற்று பிரதமர் மோடி டியூப்லைட் என பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலத்த ராகுல் , மக்களவையில் டியூப்லைட் என விமர்சனம் செய்வது அழகல்ல. பிரதமராக இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளன. வயநாட்டில் மருத்துவ கல்லூரி இல்லாதது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப விரும்பினேன். நான் பேசினால் பாஜகவுக்கு பிடிக்காது என்பதால் என்னையும் கட்சியினரையும் பேச அனுமதிக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.