Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கொடுமையே!… தலைவர் வீட்டிலேயே கொசு தொல்லையா…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது‌. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படம் மற்றும் நடிகர் ரிஷப் செட்டியை பாராட்டியிருந்தார். இதனால் நடிகர் ரிஷப் செட்டி ரஜினியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான நிலையில், அந்தப் புகைப்படத்தில் இருந்த ஒரு பொருளை ரசிகர்கள் ஜூம் செய்து தற்போது இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். அதாவது ரஜினியின் வீட்டில் கொசு பேட் இருக்கிறது. வீட்டில் கொசு தொல்லை இருந்தால்தான் கொசு பேட் இருக்கும். சாதாரண மக்களின் வீட்டில் இருக்கும் கொசு பேட் தற்போது சூப்பர் ஸ்டாரின் வீட்டிலும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் வீட்டிலேயே கொசு கடியா என்று ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |