Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனா சொல்றத ஏத்துக்க முடியாது…. வரலாற்று ரீதியா அது எங்களுக்கு சொந்தம் – எடுத்துரைக்கும் இந்தியா

வரலாற்று ரீதியாக கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது என்பது தெளிவாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்த நிலையில், சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா காணொளி மூலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரலாற்று ரீதியாக கல்வான் பள்ளத்தாக்கின் நிலை மிகவும் தெளிவாக உள்ளது. அது இந்தியாவிற்கு சொந்தமானது.

சீனாவிற்கு சொந்தமானது என அந்நாடு சொல்வதை ஏற்க முடியாது ஒப்பந்தத்தை மீறுவதற்கு சீனா முயற்சி செய்கின்றது. எல்லை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் எங்களது எல்லைக்குள்ளேயே வைத்துக்கொள்வதில் இந்தியா தெளிவாகவே உள்ளது. இதேபோன்று சீனாவும் அவர்களது நடவடிக்கைகளை அவர்களது எல்லைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை அமைதியான சூழலுக்கு கொண்டு வருவது அவசியம். வேறுபாடுகள் அனைத்தையும் பேச்சுவார்த்தைகள் மூலம் சரியாகும் என நாங்கள் நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |