Categories
தேசிய செய்திகள்

“எங்களுக்கு மழை வரணும்” நாய்களுக்கு திருமணம் செய்து…. கோலாகலமாக கொண்டாடிய மக்கள்…!!

மழை வேண்டி கிராமவாசிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் மூடநம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது.

கல்வியறிவு என்பது நம் நாட்டில் உயர்ந்தாலும் மூடநம்பிக்கை என்பது மக்களுக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மழை இல்லாமல் வாடிய கிராமவாசி மக்கள் மழை வேண்டி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். உத்தரபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்போது அந்த இரண்டு நாய்களும் வாலை ஆட்டியுள்ளது மகிழ்ச்சியின் அடையாளமாக அவர்கள் எடுத்துள்ளனர்.

இந்த திருமணத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பக்கத்து கிராமத்தில் உள்ள மக்களும் இந்த திருமணத்தில் இணைந்து மகிழ்ந்துள்ளனர். இதனால் நிவாரி மாவட்டத்தில் மழை பொழியும் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் நம்புகின்றனர். இப்படி மழை வேண்டி செல்லப்பிராணிகளுக்கு திருமணம் செய்து வைப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருமணத்துக்கு ஸ்பீக்கர் வைக்கப்பட்டு கிராமவாசிகள் மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்டுள்ளனர். இதுகுறித்து அந்த ஊர் மக்கள் கூறுகையில், “அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் நாய்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |