நடிகர் விஜய்க்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் நிலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த சோதனையில் பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் இருந்து ஆவணங்களும் , ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் புதிய சிக்கலாக மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீடு , அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாஸ்டர் படவிநியோகம் 220 கோடிக்கு நடந்ததாகவும், அதில் லலித்குமாருக்கு 50 கோடி சென்றதாக தகவல் வெளியானதையடுத்து நேற்று மாலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. 15ஆம் தேதி மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளீட்டு விழா நடைபெறயுள்ளா நிலையில் ஐ.டி ரெய்டு நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.