செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழு, ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு, என இரண்டு நிபுணர் குழுவை அமைத்தது.
இந்த இரண்டு குழுக்களும் தற்போது யுஜிசியிடமும், மத்திய அரசிடமும் சில முக்கிய பரிந்துரைகளை கொடுத்து உள்ளனர். அதில் கொரோனா வைரஸை இன்னும் தீவிரமாக கண்காணிக்க வேண்டியது உள்ளது எனவே கல்லூரிகளை ஜூன் மாதம் திறப்பதற்கு பதிலாக செப்டம்பர் மாதம் திறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இணையதள வாயிலாக பாடங்களை நடத்தக் கூடிய கல்லூரிகள் இருந்தால் அல்லது வகுப்புகள் இருந்தால் இணைய வழியாக மாதிரித் தேர்வுகளை நடத்த ஊக்குவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளை கட்டுப்படுத்தும் CBSEயும் பள்ளிகளை காலதாமதமாக திறக்கும் ஆலோசனையில் உள்ளதால் நிச்சயமாக செப்டம்பரில் தான் பள்ளி, கல்லூரிகள் இருக்கும்.