அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக வலுவான எதிர் கட்சி ? எப்படி சொல்றீங்க ? என்ன விதத்துல சொல்றீங்க புரியல ? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் நாட்டு மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், அதை சட்டமன்றத்தில் தெரிவிக்கிறோம். நான் பத்திரிக்கையில் தெரிவிக்கிறோம்.
ஊடகத்தின் வாயிலாக தெரிவிக்கிறோம். தினம்தோறும் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனா உங்க பத்திரிகைல ஊடகத்திலும் போட மாட்டேங்கிறீங்க. இதுதான் கேவலமா இருக்குது. இதை வேண்டுகோளாக வைக்கின்றேன். இவ்வளவு பெரிய கட்சி. 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி. பிரதான எதிர்க்கட்சி. நான் கொடுக்கின்ற அறிக்கையை எத்தனை பத்திரிகையில் போடுறீங்க ? எத்தனை தொலைக்காட்சியில் காண்பிக்கிறீங்க ?
ஒண்ணுமே செய்யாத திமுக தலைவரை தினம்தோறும் ஊடகத்தில் காட்டுறீங்க, பத்திரிகைல காட்டுறீங்க, நான் வருத்தத்தோடு, வேதனையோடு சொல்றேன். நாட்டு மக்களுடைய நன்மை கருதி ஊடகம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே நீங்கள் ஊடகத்தை துவங்கியிருக்கிறீர்கள். அதுவும் அதிகமான ஊடகம் தொலைக்காட்சி வந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான்.
நீங்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல செய்தியை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துடுங்க. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாங்கள் வெளியிடுகின்ற செய்தியை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது உங்களுடைய கடமை, ரெகுஸ்டராக கேட்டுக்குறேன். ஆகவே நீங்கள் பத்திரிகை, ஊடக நண்பர்களும் நடுநிலையோடு நீங்கள் செயல்பட்டால், நிச்சயமாக நாட்டு மக்களுக்கு இந்த ஆட்சியின் நிலைமை புரியும் என தெரிவித்தார்.