Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”8ஆம் வகுப்புக்கு ஒரே பாட புத்தகம்” கல்வித்துறை அதிரடி

 வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு 2012-13 கல்வி ஆண்டிலும், 9,10ஆம் வகுப்புகளுக்கு 2013-14ஆம் கல்வியாண்டிலும் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டது.

ஆனால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 -இன் படி, மாநில பாடத்திட்டத்தின் பின்பற்றிச் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5, 8 ஆகிய வகுப்பு பயிலவிருக்கும் மாணவர்களுக்கு 2019- 20ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

எட்டாம் வகுப்புக்கு ஒரே பாட புத்தகம்  one textbook for eighth standard  eighth standard book for academic year  latest eight standard book in tamilnadu  tamilnadu school 8th standard book  new textbook for 8th standard in tamilnadu  பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
 ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அறிமுகப்படுத்தப் பட்டதால், முப்பருவ முறையில் ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியான பாடப்புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே பாடப் புத்தகமாக வழங்கப்பட்டு வருகிறது.
எட்டாம் வகுப்புக்கு ஒரே பாட புத்தகம்  one textbook for eighth standard  eighth standard book for academic year  latest eight standard book in tamilnadu  tamilnadu school 8th standard book  new textbook for 8th standard in tamilnadu  பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தற்பொழுது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 முதல் பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கினால் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 2020-21ஆம் கல்வி ஆண்டிலிருந்து முப்பருவ முறையில் வழங்கப்பட்டு வரும் பாடப்புத்தகத்தை ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது” என அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |