Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி வந்த நேரம்…! DMKவுக்கு வெற்றிமேல் வெற்றி… தலைசிறந்த அமைச்சராகி கலக்கல்..!!

உதயநிதி பதவியேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் இருந்து கடைசி தொண்டன் வரை எதிர்பார்த்த நிகழ்வு…. உதயநிதி அவர்களை அமைச்சராக நியமித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு,  அமைப்புச் செயலாளர் என்ற முறையில் கழகத் தோழர் சார்பிலும்,  தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

சிறப்பாக தமிழகத்தினுடைய தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று முழு நம்பிக்கை என்னை போன்றோருக்கு இருக்கிறது. காரணம் அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் வெற்றிக்கு மேல் வெற்றி. நாடாளுமன்ற தேர்தல் 2019-இல் பிரச்சாரத்தை தொடங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை வெற்றி முகமாக இருக்கிறது. தொடர்ந்து அவருக்கு எல்லா வெற்றியும் கிடைக்கும்.  அது தமிழகத்துக்கு பயன்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |