பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் .
அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா குறித்து சாலையோரத்தில் வைத்திருந்த பேனர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னல் வந்த லாரி மோதி அவர் மீது ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை , பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டும் தொடர்ந்து கைது செய்யப்படாமல் இருந்த ஜெயகோபால் கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை காவல்துறையினர் விசாரணை நடத்திவிட்டு இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி ஸ்டார்லி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயகோபால் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என்ற தண்டனையை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.