தாய் புலி ஒன்று தன்னை போல் இல்லாத தனது குட்டியை ஏற்காததால் மிருக காட்சி சாலை ஊழியர்கள் வளர்த்து வருகின்றனர்.
அமெரிக்காவிலுள்ள நிக்கராகுவா மிருகக்காட்சி சாலையில், ஒரு ஜோடி மஞ்சள் புலிகள் மற்றும் கருப்பு நில பெங்கால் புலிகள் இருக்கின்றது. இந்நிலையில், அங்கு முதல் முறையாக வெள்ளை நிற புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதற்கு நீவ் என பெயர் சூட்டியுள்ளனர். ஸ்பானிஸ் மொழியில் நீவ் என்றால் வெண் பனி என்று பொருள். பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆன இந்த புலி குட்டி, ஒரு கிலோ எடை இருக்கிறது. நீவ்வின் அம்மா புலியானது ஒரு சர்க்கஸிலிருந்து மீட்கப்பட்டு, நீவ்விடம் வந்து சேர்ந்துள்ளது. அது, தனது தாத்தாவிடமிருந்து அபூர்வ வெள்ளை புலிக்குரிய மரபணுக்களை பெற்றிருக்கின்றது. இதையடுத்து அந்த புலி கருவுற்றிருந்தது.
கொள்ளு தாத்தாவினுடைய அந்த ஜீன்கள் தற்போது நீவ்வுக்கு கிடைத்ததால் வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளது. நீவ் பிறந்த உடனே அதன் தாயிடம் சென்று சேர்க்க ஜூ ஊழியர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், குட்டியை பார்த்த நீவ்வின் தாய், வெள்ளை நிறத்தில் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை குட்டியை ஏற்க மறுத்துள்ளது. எனவே நீவ்வை மிருக காட்சி சாலை ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். மூன்று மணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையும், நீவ்வுக்கு புட்டி பால் கொடுக்கின்றனர். தன்னைப்போல் இல்லாத தன்னுடைய குட்டியை தாய் புலியே ஒதுக்கியுள்ளது மிருகக்காட்சி சாலை நிர்வாகிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது..