தடையை மீறி மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் பெரியான்விளை பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் செல்வம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்ற குற்றத்திற்காக செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.