பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷமாக இருந்தது. அந்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் போட்டு ஆர்வமாக வீட்டு அலமாரியில் வைத்து அவ்வப்போது பார்த்து மகிழ்வார்கள். ஆனால் தற்போதைய நவீன உலகில் போற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக முழுவதும் புகைப்படத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. இதற்கு முன்பு திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே தான் இருந்தது. 1990க்கு பிறகு திருமணம் வீடுகளில் புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சொந்த பந்தங்கள், நண்பர்கள், மனமக்களுடன் புகைப்படம் எடுப்பார். மணமகன் மணப்பெண் ஆகியோரை இயற்கை காட்சிகள், அறிவிகளுக்கு அருகில் நிற்க வைப்பது போன்ற புகைப்படங்கள் எடிட் செய்யப்படும். ஆனால் தற்போது அந்த நிலைமை வேறு மாதிரி மாறிவிட்டது.
திருமண நிகழ்வுகளில் போட்டோ ஷூட்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. திருமண ஜோடிகள் வித்தியாசமான போட்டோ ஷூட் எடுப்பது தற்போது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. புதுமண தம்பதிகள் இருவரை திருமணத்திற்கு முந்தைய பிந்தைய போட்டோ ஷூட்கள் எடுப்பது. அதுமட்டுமில்லாமல் தீம் என்ற பெயரில் ஏதாவது ஒரு கதை சொல்லும் படியாக அமைந்திருக்கும் புகைப்படங்களை எடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால் சில சமயம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து சுடுகாட்டில் பாறைகளில் மீது, தண்ணிக்குள், மரத்தில் தொங்கி போல பலவகையான போட்டோ எடுப்பது என அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மணமகன் தலைகீழாக நிற்பது போன்று மணப்பெண் அவரது அருகில் நடனம் ஆடுவது போன்று கோவில் ஒன்றில் எடுக்கப்பட்ட திருமண போட்டோஷிட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “இதுக்குத்தான் கல்யாணம் பண்ணிக்காதன்னு சொன்ன கேட்ட தானே” என்று கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் இந்த போட்டோ எடுக்கப்பட்டது என்பன உங்கிட்ட தகவல் எதுவும் தெரியவில்லை.
https://twitter.com/i/status/1588771247982522369