Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க விடவே மாட்டாங்க போல!…. நயன்-விக்கிக்கு புதிய சிக்கல்…. வழக்கறிஞர் சார்லஸ் அதிரடி புகார்….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக உள்ளது. இவர்கள் இருவரும் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு நிறைய சட்டவிதிகள் இருக்கும்போது இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்து, சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அரசு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர். இது இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |