மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி காவல்துறையினர் ஆய்க்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அக்ரஹாரத்தில் பகுதியில் நீண்ட நேரமாக சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் இடைக்காலப் பகுதியில் வசிக்கும் குமரேசன், இசக்கிசூர்யா மற்றும் மருதராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த 3பேரும் இணைந்து தான் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவர்கள் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்திற்காக மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.