Categories
அரசியல் மாநில செய்திகள்

இவங்க பலூன் விடுற ஸ்கூல் பசங்க…. இவங்ககிட்ட தமிழக நிர்வாகமா…? – ஹெச். ராஜா விமர்சனம்…!!

ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவர்கள் தமிழகத்தின் தீய சக்திகள் என்று ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருவதால் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது.

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட தொகுதியில் பகுதியில் பாஜக சார்பில் “வெற்றி கொடி ஏந்தும் தமிழகம்” என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா மு.க ஸ்டாலின், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவர்கள்  “தமிழகத்தினுடைய தீய சக்திகள்”. எனவே இவர்கள் அனைவருமே பலூன் விடும் பள்ளிக்கூடப் பிள்ளைகள். இந்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் கையில் தமிழக நிர்வாகம் சென்றால் மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே தமிழகத்திற்கு வந்து சேராது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |