அதிபர் டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவன்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடிக்கு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் கொரோனா பாதிக்கப்பட்ட மூன்றாவது ஊழியராக அவர் உள்ளார் என ஊடகமொன்று தெரிவித்திருந்தது. கேடி டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக இருந்து வந்தார் ஆனால் பல வாரங்களாக அவர் இவருடன் இல்லை.
இரண்டு மாதங்கள் தொலைபேசியிலேயே பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நிமித்தம் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார் அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணிவதை இப்போது உறுதியாகியுள்ளது வெள்ளை மாளிகை. மேலும் கொரோனா தொற்று சோதனைகள் மேற்கு பகுதி முழுவதும் அதிக படுத்தப்பட்டுள்ளது.
வெஸ்ட் விங் அடிக்கடி சுத்திகரிக்கப்படுகிறது எனவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையின் பணிக் குழுவை வழிநடத்தும் பென்ஸ் என்பவர் சமீபத்தில் கிளினிக் ஒன்றிற்கு சென்றபொழுது முக கவசம் அணியாமல் சென்றுள்ளார். அரிசோனாவில் முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற அதிபர் டிரம்ப் முக கவசம் அணிய மறுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.