Categories
உலக செய்திகள்

டிரம்ப் மக்களுக்கு கொரோனா ? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

டிரம்ப் மகளின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவான்கா டிரம்ப்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

கொரோனா தொற்றினால் அமெரிக்காவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கும் நிலையில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரமாக அந்த உதவியாளர் இவாங்கா ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் பணிபுரியாமல் தனது வீட்டில் இருந்தே பணி புரிந்துவந்தார். ஆனால் முன்னெச்சரிக்கையாக இவான்கா ட்ரம்ப், அவரது கணவர் ஜாரேட் குஷ்னருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே, நேற்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தியாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

இதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் பணிபுரிந்து வரும் மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா  பரவமால் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதன்படி வெள்ளை மாளிகையில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. அந்தவகையில், அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. முன்னதாக, ட்ரம்பின் தனி பாதுகாவலருக்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் பணிபுரிந்து வரும் அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |