விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராங்க் டாஸ்க் பெயரில் பல போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட விஷயம் பரபரப்பை கிளப்பியது. அசிம் போட்டியாளரை வாடி போடி என கூறியது பதிலடிக்கு ஆயிஷா செருப்பை கழட்டி அடிக்க போனது என பல விரும்ப தகாத செயல்கள் அரங்கேறி உள்ளது. இந்நிலையில் ரச்சிதா குறித்து ADKவிட பேசிய அசீம்,நான் ரச்சிதாவிடம் நீங்கள் கேமரா அருகில் சென்று கொஞ்சுவதே தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று கூறினேன்.
ஏதாவது இருந்தால் அவங்களே போய் கேமரா முன்னாடி பேசிப்பாங்க. இதற்கு முந்தைய பிக் பாஸ் சீசனில் ஒரு பெண்ணோ, பையனோ கேமரா முன்னாடி பேசி அதுல அவங்க ரொம்ப ஃபேமஸ் ஆகி இருப்பாங்க. அதை ரச்சிதா எடுத்துக்கொண்டு செய்கிறார் என நான் வெளிப்படையாக தான் சொன்னேன். இதற்கு முந்தைய சீசன் ஒரு பெண் இப்படித்தான் செய்தார். அது யார் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்ணின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. அப்படி செய்த அவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதை அப்படியே ரச்சிதா இங்கு காப்பி அடிப்பது போல எனக்கு தெரிந்தது. அதை தான் நான் அவரிடம் வெளிப்படையாக சொன்னேன் என பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.