Categories
மாநில செய்திகள்

“YOUR PLATFORM” ரயில் பயணிகளுக்கு ஸ்மார்ட் இதழ்…. தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்தியாவில் தெற்கு ரயில்வே நிர்வாகம்  ஒரு நாளிதழை வெளியிட்டுள்ளது. இதை  E-Tolls ads media and Earth and air நிறுவனமும் சேர்ந்து வே;யிட்டுள்ளது. இந்த நாளிதழ் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் யுவர் பிளாட்பார்ம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழை பி.எஸ் கார்த்திக், எம்.சிவ் சங்கர், வி.பிரவீன்குமார் ஆகியோர் சேர்ந்து உருவாக்கி யுள்ளனர். இந்த நாளிதழில் நேர்மையான எண்ணங்களை விதைக்கும் தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளிதழ் தற்போது முதல் கட்டமாக சென்னை முதல் பெங்களூர் வரை செல்லும் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ், சென்னை முதல் மதுரை வரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ், சென்னை முதல் கோவை வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை முதல் மைசூர் வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளிதழில் பேஷன், ஓய்வு, பயணம் குறித்த தகவல்களும் தெற்கு ரயில்வேயின் பங்களிப்பு குறித்த தகவல்களும் இடம்பெறும்.

இந்த நாளிதழில் மாதந்தோறும் நான்கு பக்கங்கள் புதிதாக இணைக்கப்படும். இந்த நாளிதழ் புத்தகமாகவும் டிஜிட்டல் வடிவத்திலும் வழங்கப்படுவதால் நாளிதழில் உள்ள க்யூஆர்கோடை  ஸ்கேன் செய்தால் இணையதளத்தில் நாளிதழை தொடர்ந்து பின்பற்றலாம். இந்த நாளிதழில் விளம்பரதாரர்களும் இணைந்து செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இதழில் ஒவ்வொரு வாசகரும் கண்டிப்பாக 30 நிமிடங்களை செலவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் yourplatform.in இணையதள சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |