Categories
மாநில செய்திகள்

இவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பொதுமக்கள் மட்டுமல்லாமல்  மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு பலரும் உயிரிழந்தார்கள். ஆனால் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் எண்ணத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல   ஒவ்வொரு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்  குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு பணி வழங்க சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 53 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்ப பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |