Categories
மாநில செய்திகள்

இவரு எங்க லிஸ்ட்லயே இல்ல… கமல்ஹாசனை கலாய்த்த எம்.பி…!!!

தமிழகத்தில் தேர்தலில் கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தின் கீழுள்ள 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் திறப்பு போன்ற பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி பங்கேற்றார் . மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ,கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அசோக்குமார் ,ஓசூர் மாநகர செயலாளர் எஸ் நாராயணன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது நிகழ்ச்சியில் அவர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரும் சந்தித்து பேசியதாக கூறினார். நாங்கள் நீண்ட நாள் நண்பர்கள் மற்றும் நடிகர்கள் என்றனர். ஆகையால் இருவரும் நட்பு ரீதியாக சந்திக்கக்கூடும் என்று கூறினார்.

இப்போது அரசியலில் கட்சி தொடங்க முடியாத சூழலில் உள்ளதாக ரஜினி கூறினார். கமலஹாசன் ரஜினியை சந்தித்துப் பேசியது பற்றி அவர்தான் கூறவேண்டும்.இப்பொழுது வரை கமலஹாசன் கட்சி தொடங்கி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை இனியும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனக் கூறினார். சினிமாவில் 60 ஆண்டுகளாக நடித்துவிட்டு தற்போது மக்களை காப்பாற்றுவேன் என்று வந்தால் மக்கள் அவர்களை நம்பி விடுவார்களா? மக்களுக்கு நாங்கள் 60 ஆண்டுகாலமாக சேவை செய்து கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பல கட்சிகள் திடீரென தேர்தலுக்கு வரும் பின்னர் காணாமல் சென்று விடும் என்று உறுதியாகக் கூறினார்.

Categories

Tech |