பிரபல நடிகை நிவேதா தாமஸின் புது வித திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா தாமஸ். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ என்ற பாடலை பாடி, அதற்குத் தானே இசையமைத்துள்ளார். இந்த வீடியோ காட்சியை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு திறமையும் இருக்கிறதா என்று பாராட்டி வருகின்றனர்.
https://www.instagram.com/tv/CNmASOKniBz/?igshid=1iuiu61cuin75