Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் எப்போதும் பெஸ்ட் தான்…. தன்னம்பிக்கையுடன் களம் இறங்கும் கிறிஸ் கெயில்…!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 41 வயதான கிறிஸ் கெயில் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறியதாவது, “ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணிக்காக என்னை அணில் கும்ப்ளே 3-வது இடத்தில் களம் இறங்கினார். அப்போது நான் சிறப்பாக விளையாடினேன். என்னுடைய அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளவே அணி நிர்வாகம் என்னை மூன்றாவதாக களமிறக்கியுள்ளது.

அது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. இதற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி என்னை எந்த இடத்தில் களம் இறங்கினாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நான் இப்போது மிகச் சிறந்த வீரனாக இருக்கிறேன்.என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்பதில் சந்தேகமில்லை. நான் எப்போதும் பெஸ்ட் தான்” என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |