பிரபல டிக் டாக் அழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளி உலகத்திற்கு தங்களது இனியமுகத்தை காட்டி விட்டு மறுபக்கம் மன உளைச்சலால் சில பிரபலங்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஜாரியா குவிண்ட் நோயெஸ் என்ற 18 வயதுடைய இளம் பெண் டிக் டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். அவரை 1.5 மில்லியன் பேர் டிக் டாக்கில் பின் தொடர்கின்றனர்.
அவர் வெளியிடும் நடன வீடியோக்களில் அவரது தந்தையும், பாட்டியும் கூட இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கள் அன்று ஒரு நடன வீடியோவை வெளியிட்டார். அதன்பிறகு நான் உங்களை தொந்தரவு செய்து விட்டேன், என்னை பார்ப்பது இதுதான் கடைசி முறை என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதற்குப் பின் அவரின் தந்தை ரஹீம் அல்லா, நோயெஸ் இப்போது நம்மிடம் இல்லை என்றும் அவள் சிறப்பான ஒரு இடத்திற்கு போய் விட்டாள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,நோயெஸ் தனது கடைசி வீடியோவை வெளியிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என் மகள் மன உளைச்சலில் இருந்தது எனக்கு தெரியாது. அப்படி அவள் என்னிடம் கூறி இருந்தால் அதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து இருப்பேன். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.