கொரோனா வைரஸ் தொடர்பான ஐவிஆர்எஸ் தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறியவே இந்த குரல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது .