Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாலாவின் ‘விசித்திரன்’ … டீசரை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா…!!

இயக்குனர் பாலாவின் ‘விசித்திரன்’ படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா . இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார் . தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் இயக்குனர் பாலா தயாரித்துள்ள படம் ‘விசித்திரன்’ . இயக்குனர் பதம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் .

இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் ,மதுஷாலினி ,பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் டீசரை புத்தாண்டு தினத்தன்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |