இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் கோகுல் ‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை ஸ்ரேயா நடித்திருந்தனர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் காஷ்மோரா , ஜூங்கா ஆகிய படங்களை இயக்கியிருந்தார் .
கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் கோகுல் ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது . ஆனால் இந்தப் படத்தின் கதாநாயகன் குறித்த தகவலை படக்குழு அறிவிக்கவில்லை . இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால் இந்த கதைக்கு சந்தானம் பொருத்தமாக இருப்பார் என கூறப்படுகிறது.