Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் குணசேகரின் ‘சகுந்தலம்’… நடிக்க மறுத்த அனுஷ்கா… ஒப்பந்தமான சமந்தா…!!!

இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் உருவாகும் புராண கதையில் அனுஷ்கா நடிக்க மறுத்ததால் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார் .

சமீபகாலமாக ரசிகர்கள் சரித்திர, புராண கதைகளை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் . அதிலும் குறிப்பாக பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பல சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது . அந்த வகையில் தற்போது  சகுந்தலை புராண கதையை படமாக்குகிறார் இயக்குனர் குணசேகர். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கியவர் .

Samantha signs mythology film Shakuntalam with director Gunasekar on New  Year. Teaser out - Movies News

இந்த படத்திற்கு ‘சகுந்தலம்’ என பெயரிட்டுள்ளனர் . இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது . இந்தப் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகைகள் அனுஷ்கா , பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்ததாக தெரிகிறது . இந்நிலையில் சகுந்தலையாக நடிக்க நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . மேலும் இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார்.

 

Categories

Tech |