Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம்… ஹீரோ யார் தெரியுமா?…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில்  இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் ரன் ,சண்டக்கோழி, பையா, அஞ்சான் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார் . இந்நிலையில்  இவர் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க இருக்கிறார் .

 

தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை  தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்ரீ்நிவாச சித்தூரி தயாரிக்கவுள்ளார் ‌. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் ,சண்டக்கோழி ஆகிய படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டபோது நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது அவருக்கு நேரடி தெலுங்கு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |