இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் நெட்ப்ளிக்ஸ் தளத்துக்காக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார் .
இந்த படத்தை கௌதம் மேனன், கே வி ஆனந்த், பிஜாய் நம்பியார் ,அரவிந்த் சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம் ,கார்த்திக் நரேன் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் இயக்குனர் பொன்ராமுக்கு பதில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ள படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .