Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… படத்தில் இணைந்த பிரபல நடிகர்…!!!

இயக்குனர் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் விக்ரம் ,ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது . இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்தது . இதையடுத்து கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது.

தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் இந்த படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ‘மணிரத்னத்துடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இன்றளவும் தொடர்கிறது’ என பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |