தளபதி 66 படத்தில் இருந்து இயக்குனர் ராஜுமுருகன் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தினை இயக்குனர் வம்சி பைடிபல்லி டைரக்ட் செய்யவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் பல அருமையான பாடல்களை தர விருக்கிறார். இதனை கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இந்த நிலையில் தளபதி 66 படத்திற்கு வசன எழுத்தாளராக ராஜு முருகன் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. இவர் ஜிப்ஸி, ஜோக்கர், குக்கூ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படத்தில் “தல கோதும் பூங்காத்து” என்ற பாடலை எழுதி இருந்தார். மேலும் வம்சியின் தோழா படத்திலும் இவர் பணிபுரிந்து இருந்தார். இந்த நிலையில் கார்த்திக் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கம் இருப்பதால் தளபதி 66 படத்தில் இரண்டு ராஜுமுருகன் விலகி உள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு பதிலாக தளபதி 66 படத்திற்கு விவேக் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இருந்து ராஜு முருகன் விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.