இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமாகியுள்ளார் .
தமிழ் திரையுலகில் இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா ,மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார் . தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி காலமாகியுள்ளார் . இவருக்கு வயது 62 ஆகும் . மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இதனால் இயக்குனர் சுசீந்திரனின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர் . இதையடுத்து அவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.