இயக்குனர் வசந்தபாலன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ‘மாஸ்டர்’ பட நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் வசந்தபாலன் 2002ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான வெயில் ,அங்காடித்தெரு, காவியத்தலைவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . அதிலும் குறிப்பாக வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது . தற்போது இவர் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜெயில். இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் அபர்னதி ஆகியோர் நடித்துள்ளனர்.
விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தி லிப்ட் பாய்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். இந்தப்படத்தில் கைதி, அந்தகாரம், மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமடைந்துள்ள அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.