வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகரின் தங்கை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது . இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது .
இந்தப் படத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா திடீரென விலகியதால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இசையமைப்பாளரும் ,நடிகருமான ஜி.வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஒப்பந்தமாகியுள்ளார் . இவர் பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் ‘தங்கம்’ என்ற குறும்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் க/பெ ரணசிங்கம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .