அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மணல் கடத்திக்கொண்டு சென்ற 2 நபர்கள் அதிகாரிகளை பார்த்தும் சிறிது தூரத்திலேயே மாட்டு வண்டியை நிறுத்தி மாட்டை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.