ஊராடங்கின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக லாரியில் மது பாட்டில்களை கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர் . அப்போது காவல்துறையினர் நிற்பதை பார்த்தும் அவ்வழியாக வந்த லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவர்கள் வண்டியை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.
இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கூவத்தூர் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியசாமி மற்றும் ராஜேஷ் என்பதும் அவர்கள் லாரியில் நிலக்கரி சாம்பல் நெய்வேலியில் இருந்து கும்பகோணத்திற்கு அள்ளி சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரியின் உள்ளே சென்று சோதனை செய்தபோது அங்கு 61 குவாட்டர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் உடனடியாக மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் அரசு விதிமுறையை மீறி மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த குற்றத்திற்காக ராஜேஷ் மற்றும் ஆரோக்கியசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.