அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள ஹல்திபாரி என்ற இடத்தில் காண்டாமிருகம் ஒன்று வேகமாக வந்த லாரி மீது மோதிய வீடியோவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு காண்டாமிருக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது லாரியின் மோதி தாக்கப்பட்ட பிறகு அந்த காண்டாமிருகம் எழுந்து நின்றது. அதன் பிறகு மீண்டும் கீழே விழுந்து, பின்பு மீண்டும் காட்டுக்குள் ஓடியது.
இது பற்றி அவர் கூறியது, காண்டாமிருகங்கள் சிறப்பு நண்பர்கள். எனவே காண்டாமிருகங்களின் இடத்தில் யாரும் எல்லை மீறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் காண்டாமிருகம் உயிர் பிழைத்தது. அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. விலங்குகளை காப்பாற்ற 32 கிலோமீட்டர் உயரமான தாழ்வாரம் அமைப்பது குறித்து செயலாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Rhinos are our special friends; we’ll not allow any infringement on their space.
In this unfortunate incident at Haldibari the Rhino survived; vehicle intercepted & fined. Meanwhile in our resolve to save animals at Kaziranga we’re working on a special 32-km elevated corridor. pic.twitter.com/z2aOPKgHsx
— Himanta Biswa Sarma (@himantabiswa) October 9, 2022