Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெ.அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு …!!

 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைந்தார். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி சாமி மறைந்தார். இந்த இரண்டு தொகுதி காலியானதாக ஏற்க்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரை 234 இடங்கள் இருக்கக் கூடிய நிலையில், இந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டதுள்ளது.

Categories

Tech |