ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே என்ற வருத்தம் இருக்கா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா,
ஒன்னு வச்சுக்கோங்க. எல்லோருடைய மனதும் ஒரே மாதிரி இருக்காது. நீங்க இப்போ என்ன கொண்டு போயி எந்த இடத்தில ? எந்த உயரத்தில் உட்கார வச்சீங்கனாலும், நான் என்னோட பாதத்தை பார்த்து தான் நடப்பேன். அதனால ஒவ்வொருடைய மனசிலும், செயல்பாடு மாறும்போது நீங்களும் ஒன்னு செய்ய முடியாது. நானும் ஒன்று செய்ய முடியாது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக வாக்குமூலம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா,
ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து சிறைச்சாலைக்கு பெங்களூருக்கு வந்த கடிதம் என்னன்னா…. மூணு ஆப்ஷன் கொடுத்திருந்தாங்க.. ஒன்னு நேரில் வரவும். இரண்டாவது வக்கீல் வழியாக தெரிவிக்கலாம். மூன்றாவது நான் எழுத்து வடிவிலும் கொடுக்கலாம். கொஸ்டின் அங்க இருந்து வரும். அதற்கான பதிலை நான் எழுத்து வடிவில் கொடுக்கணும். நான் அதைத் தேர்ந்தெடுத்தேன்.
அதை தேர்ந்தெடுத்து அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்தேன். மத்தவங்க எப்படி நினைக்கிறாங்களோ தெரியல. என்னை பொறுத்த வரைக்கும் அது ( ஜெ மரணம் விவகாரம் ) கிளியராகணும். அந்த ரிசல்ட் வெளியே தெரியணும். ஏன்னா அரசியல் காரணங்களுக்காக நான் இருந்து பைட் பண்றதுங்கறது வேற. நான் இல்லாத போது முதுகுக்கு பின்னால குத்துறது மனிதனே கிடையாது. புரியுதா ? அதாவது ஒருத்தங்களை எதிர்க்கணும் அப்படின்னா நேரில் எதிர்க்கனும் என தெரிவித்தார்.