இன்றைய சட்டப்பேரவை தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் விதமாக… குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு முடித்து வைக்கப்பட்டது.
நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022- 2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு, செலவு திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.
அதனைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக ஒரு அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, விவாதிக்கப்படும். நாளை மறுநாள் கூடுதல் செலவினத்துக்கான மானிய கோரியின் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறும். தேவைப்பட்டால் ஏதேனும் அரசின் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
நாளை, நாளை மறுநாள் இரண்டு நாட்கள் முழுமையாக சட்டமன்ற நடைபெறும். இந்த இரண்டு நாளும் கேள்வி நேரம். இரண்டு அறிக்கைகள் சட்டமன்றத்திற்கு வைக்கப்படும், விவாதிக்கப்படும். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ஒன்று, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார்.