சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் பொது மக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வசித்துவந்த போயஸ் கார்டன் இல்லமானது கடந்த ஜனவரி மாதத்தில் அவரின் நினைவிடமாக தமிழக அரசால் மாற்றியமைக்கப்பட்டது. இதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் வீடு கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியான சேஷசாயி, பொதுமக்களின் பார்வைக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு ஆணையிட்டார்.இதை எதிர்த்து தமிழக அரசானது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதனை விசாரித்த போது மறைந்த முன்னாள் முதலமைச்சரின் இல்லமான போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கக் கூடாது என்ற தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். இதன் மூலம் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து, தீபா தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்ய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.